Friday 22 July 2016

நிதிக்கான அந்த மாற்று வழி என்னாயிற்று..?

தமிழகஅரசின் திருத்தப்பட்ட பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த நிதி மற்றும்
நடைமுறை நிதி பற்றாக்குறைகள் மிக அதிகமாக இருக்கின்றன. இதை ஈடுகட்டும் வழி
முறைகள் பற்றிய தகவல்கள் இல்லை.இதிலே 500 மதுக்கடைகளை மூடியதால் வருவாய் 
இழப்பு என்று புலம்பல் வேறு.(ஆக படிப்படியான மதுவிலக்கு எனப்பட்டது முதல்படியோடு
நின்று போகும் போலும்!) அப்புறம் அரசின் மொத்த கடன் ரூ21\2 லட்சம் கோடியை எட்டியி
ருக்கிறது; அதற்கான வட்டி சுமார் ரூ25000 கோடி எனப்படுகிறது. ஒரே முகாரி ராகம்தான்.
ஆனால் இதெல்லாம் எதிர்பார்க்கப்பட்டதுதானே? இதற்காகத்தானே கிரானைட் மற்றும்
தாதுமணல் எடுப்பு-விற்பனையை அரசே செய்து, அதிலிருந்து கிடைக்கும் வலுவான
வருவாயைகொண்டு இதுவெல்லாம் சமாளிக்கப்படும் என்று அதிமுக கூறியது.அது என்
னாயிற்று?அது பற்றிய திட்டவட்டமான அறிவிப்பு எதையும் காேணாமே! "குடிமக்களின்
மகிழ்ச்சியே அரசனின் மகிழ்ச்சி, அவர்களது நலனே தனது நலன்" எனும் அர்த்தசாஸ்திர
த்தை மேற்கோள் காட்டியிருக்கிறார் நிதியமைச்சர். சாணக்கியர் காலத்தில் குடிமக்கள்
என்போர் முதல் மூன்று வருணத்தவர்தாமே தவிர சூத்திரர்களோ பஞ்சமர்களோ அல்ல
என்பதை அவர் அறிவாரா? அல்லது அதேபோல இந்த அரசும் இயற்கைவளத்தை கொள்
ளையடிக்கும் சில தனியார் நிறுவனங்களது மகிழ்ச்சியையே தனது மகிழ்ச்சியாகக் கொ
ண்டிருக்கிறது என்று ஒப்புக்கொள்கிறாரா?

No comments:

Post a Comment