Tuesday 16 August 2016

Joker - Official Jukebox | Sean Roldan | Raju Murugan

ஜோக்கர்‬

மேகிய தடை பன்னுனா சீனாவுக்கு பிடிக்கல
குளிர்பானத்த தடை பண்ணுனா அமெரிக்காவுக்கு 
பிடிக்கல,
ஹெலிகாப்டரா ஏன் கும்பிடுறீங்கனு அமைச்சர்கிட்ட
சொன்னா ஆளுங்கட்சிக்கு பிடிக்கல,
அரநாள் உண்ணாவிரத்த்துக்கு 10 ஏர்கூலரானு கேட்டா எதிர்கட்சிக்கு பிடிக்கல,
சாதி மறுப்பு திருமணம் பண்ணி வச்சா
சாதிவெறியன்களுக்கு புடிக்கல
குண்டு வைக்கிறவன விட்டுங்க, கோயில்ல உண்டக்கட்டி வாங்குறவன் பிடிங்க?
கக்கூஸ்ல ஊழல் பண்ற உங்ககிட்ட கருணையை எப்படி எதிர்பார்க்கிறது?
ஹீரோவைவிட வில்லனைத்தான் இப்போ ஜனங்களுக்கு பிடிக்குது
நிம்மதியா வாழவும் விடல பேளவும் விடல இவிங்க
எந்த போலீஸ் ஸ்டேஷன்லயாவது ஆடி காரோ, பி.எம்.டபிள்யூவோ துருப்பிடிச்சு நின்னுட்டிருக்கா?’
கக்கூஸ் கட்டுன காசு நாறாது
சகாயம் பண்ணல.. அட்லீஸ்ட் சகாயம் மாதிரி பண்ணுங்க
நகைக்கடைக்காரன் புரட்சி பண்ற நாட்ல, ஜனாதிபதி புரட்சி பண்ணக் கூடாதா?
உங்களுக்கு நல்லது பண்ணினா நான் பைத்தியக்கரனா? போங்கடா போய் பீயை தின்னுங்க.? லாட்ஜ்ல பிராத்தல் பண்ணுங்க
நாம ஓட்டுப்போட்டுதான அவன் ஆட்சிக்கு வர்றான்… அவன டிஸ்மிஸ் பண்ண உரிமை இல்லையா….?
இது போன்ற வசனத்துக்காகவும்
அரசியல் வாதிகள் மற்றும் கார்ப்பரேட்கள் சம்பாதிப்பதற்காகவே உருவாக்கப்பட்ட
மோடியின்கிளீன் இந்தியா திட்டத்தின்
உண்மை தன்மையை கிழி,கிழி என கிழித்தமைக்காகவும. பல இடங்களில் அம்பேத்கர் ,பெரியார் ,பகத்சிங் போன்ற
முற்போக்காளர்களின் புகைப்படம் மட்டுமல்ல
அவரது கருத்துக்களும் படம் நெடுகிலும் பேசப்படுவதற்கும்‪#‎ஜோக்கரை‬ பல முறை ரசிக்கலாம்...
ஒட்டு மொத்த மக்களுக்கு போராடுகிறவங்கள பார்த்து வெட்டியா கத்துறாங்க,
ரோட்ல டிராபிக் ஜாம் பண்றாங்க,
,ஜோக்கருங்க என நெனச்சவங்க பல பேர்கிட்ட
சின்ன மாற்றத்தனாலும் ஏற்படுத்தும் இந்த படம் ,
‪#‎வீதிக்கு_வா_தோழா_போராட‬

ஜோக்கர் ...


தம்பி முருகா, பரிதாபம் கொள்கிறேன்.
பிழைக்கும் வழியைப் பார்..
இந்த மானமற்ற கூட்டத்திற்காகவா படம் எடுக்கிறாய்..?
போ, கரம் மசாலா, கற்பழிப்பு, குத்துப்பாட்டு ,ஆத்தா சென்டிமென்ட் வைத்து படமெடு.
நீலாங்கரையில் வீடு வாங்கு..
ஆடி, ஆவணி கார் வாங்கு..
நல்லாயிரு ராசா...
வேணாம்யா, இந்த விளையாட்டு.
500 கொடுத்தால் கொலை செய்வான்.
1000 த்தை காட்டினால் தற்கொலை புரிவான்..
இந்த கேடு கெட்ட தமிழன்.
ஆனா ஒண்ணுய்யா.. தியேட்டர் காவலாளி வந்து "சார், படம் முடிஞ்சு போச்சு.. வெளியே வாங்க" ன்னாரு.
அந்த வெள்ளைத்திரையைப் பார்த்த பிறகுதான் நடக்க ஆரம்பித்தேன்.

கவிஞர் நா.முத்துக்குமார்


உலகின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம் நடப்பவை நாடகம் என்று நாமும் சேர்ந்து நடித்திருப்போம்' நா.முத்துக்குமாரின் வரிகள்தான் இவை.
ஒரு கலைஞன் மறைந்தபின், அவன் அளித்த படைப்புகள் எல்லாமே அந்த மறைவை ஒட்டிய நினைவலைகளாகவே பார்க்கப்படும். இன்றைக்கு நம்மை விட்டுப்பிரிந்த நா.முத்துக்குமார் குறுகிய காலத்தில் புலிப்பாய்ச்சலாய் எண்ணற்ற படைப்புகள் அளித்தவர். வெறும் வார்த்தைத் தோரணங்களாக இல்லாமல், அர்த்தமுள்ள வரிகளாய் அவற்றை மாற்றியவர்.
"சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும் மலையின் அழகோ தாளவில்லை... " என்பன போன்று தீவிர இலக்கியவாதிகளும் வியந்து பாராட்டும் உவமைகளை அளித்தவர். கவிஞனின் பயணம் கவிஞனின் வார்த்தைகளிலேயே... இங்கே...
தீயோடு தோன்றுக!
1975-ம் ஆண்டு ஜூலை மாதம் 12-ம் தேதி என் தாயின் பிறந்தகமான சென்னையில், எழும்பூர் அரசு மருத்துவ மனையில் நான் பிறந்தபோது, ஒட்டுமொத்த மருத்துவமனையே மாடிக்கு ஓடி வந்தது. என்னைப் பார்க்கத்தான் வருகிறார்கள் என்று நான் என் பால்யத்தின் முதல் புன்னகையைப் பூமிக்குப் பரிசளித்தபோது, அந்தக் கூட்டம் என்னைக் கடந்து, மொட்டை மாடிக்குச் சென்றது. ஒரு சில உயரமான கட்ட டங்களே சென்னையாக இருந்த அந்த மொட்டை மாடியில் பதற்றத்துடன் அவர்கள் பார்த்த காட்சி எல்.ஐ.சி. கட்டடம் தீப்பிடித்து எரிந்துகொண்டு இருப்பதை. இப்படித்தான் நண்பர்களே நான் பிறந்தபோதே என்னைச் சுற்றித் தீப்பிடித்தது. அந்தத் தீயை அபசகுனமாகக் கருதாமல், என் தகப்பன் தன் நாட்குறிப்பில் இப்படி எழுதினான்... 'இன்று உலகின் இரண்டாவது அறிவாளி பிறந்தான்!' நான் முதல் முறையாக நா.முத்துக்குமார் ஆனேன்!
ஆழம் அறி!

எங்கள் வீடு முழுக்கப் புத்தகங்களே வியாபித்திருந்தன. தமிழாசிரியரான தந்தை தேடித் தேடி புத்தகம் வாங்கினார். வால்கா முதல் கங்கை வரை என்னை புத்தக உலகில் பயணிக்கவைத்தார். மூன்றாம் வகுப்பு படிக்கையில் சந்தை என்ற தலைப்பில் சிறுகதை எழுதி அப்பாவிடம் வாசிக்கக் கொடுத்தேன். காய்கறிச் சந்தையில் கடை வைத்திருப்பவரைப்பற்றிய கதை. வாசித்துவிட்டு ஒன்றுமே சொல்லாமல் திருப்பிக் கொடுத்தார். அடுத்த நாள் அதிகாலை ஐந்து மணிக்கு என்னை எழுப்பி சைக்கிளில் அமரவைத்து, காஞ்சிபுரம் ராஜாஜி காய்கறிச் சந்தைக் குக் கூட்டிச் சென்றார். ஒருபுறம் லாரியில் இருந்து கூடை கூடையாகத் தக்காளிகள் இறங்கிக்கொண்டு இருக்க... உள்ளூர் விவசாயிகள் கீரைக் கட்டுகளை அடுக்கிக்கொண்டு இருந்தனர். எங்கிருந்தோ வந்த ஒரு பசு மாடு, வாழை இலை ஒன்றை இழுத்து கடிக்கத் துவங்க, யாரோ ஒருவர் அதை விரட்டிக்கொண்டு இருந்தார். 'இந்த டீக்கடையில் நான் காத்திருக்கிறேன். நீ மார்க்கெட் முழுக்கச் சுற்றிப் பார்த்துவிட்டு வா' என்றார் அப்பா. அரை மணி நேரம் கழித்துத் திரும்பி வந்த என்னிடம் 'உன் கதை நன்றாக இருந்தது. ஆனால், அதில் உண்மையான காய்கறிச் சந்தை இல்லை. எந்த இடத்திலும் காய்கறியின் வாசம் இல்லை. எதையும் உணர்ந்து அனுபவித்து எழுது, உன் எழுத்து வலிமையாக இருக்கும்' என்றார். வீட்டுக்குச் சென்றதும் அந்தக் கதையைக் கிழித்துப் போட்டேன். அன்று இரண்டாம் முறையாக நான் நா.முத்துக்குமார் ஆனேன்!
கோபம் கற்றுணர்!
பள்ளியில் படிக்கும்போதே என் கவிதைகளும் கதைகளும் பத்திரிகைகளில் வர ஆரம்பித்தன. எங்கள் பள்ளியில் ஒரு சில ஆசிரியர்கள் தங்களிடம் டியூஷன் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே பாஸ் மார்க் போட்டார்கள். வகுப்பிலும் சொல்லித் தருவதில்லை. இதைக் கண்டித்து தூசிகள் என்று கவிதைத் தொகுதி வெளியிட்டேன். பிரேயரில் என் கவிதை விவாதிக்கப்பட்டு, என்னை ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்தார்கள். வார்த்தைகள் என்னைக் கைவிட்ட நிலையில், குற்றஉணர்வுடன் அப்பா முன் நின்றேன். அவர் அமைதியாகச் சொன்னார், 'இப்போதுதான் உன் எழுத்து வலிமையாகிக்கொண்டு இருக்கிறது. இன்னும் நிறைய எழுது!' மூன்றாம் முறையாக நான் நா.முத்துக்குமார் ஆனேன்.
உன் திசை உற்றுணர்!
காஞ்சி பச்சையப்பனில் இளங்கலை இயற்பியல் சேர்ந்தேன். எங்கள் வீடும் கல்லூரியும் அருகருகே இருந்ததால், பத்திரிகைகளில் இருந்து என் கவிதைக்கு வரும் சன்மானத் தொகையை என் வகுப்புக்கே வந்து தருவார் தபால்காரர். வேதியியல் பேராசிரியர் ஒருவர் ஒருநாள் இதைக் கவனித்து, 'இப்படியே கதை, கவிதைன்னு சுத்துனா, சத்தியமா நீ பாஸாக மாட்டே' என்று திட்டினார். எப்போதும் அதிக மதிப்பெண்கள் வாங்கும் மாணவன் ஒருவன் என்னைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தான். அன்று ஒரு வைராக்கியம் தோன்றியது. அவனைவிட ஒரு மார்க்காவது அதிகம் வாங்க வேண்டும். 85 சதவிகிதம் பெற்று தேர்ச்சியடைந்தேன்.
அவனுக்குக் கிடைக்காத பி.டெக். வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. என் சபதத்தை முடித்துக்கொண்டு, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ. தமிழ் இலக்கியம் சேர்ந்தேன். இவ்வளவு மார்க் எடுத்துட்டு ஏன் தமிழ் படிக்கிறாய் என்று அறிவுரை சொன்னார்கள். மௌனமாகத் தலையாட்டிவிட்டு, மண்ணில் விழுந்த மழைத் துளிபோல் தமிழின் வேர் வரை பயணிக்கத் தொடங்கினேன். கல்லூரியிலேயே முதல் மாணவனாகத் தேர்ச்சி அடைந்ததும், அமெரிக்காவில் இருந்து ஒரு பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியர் பணிக்கு வரச் சொல்லிக் கடிதம் வந்தது. மாதம் மூன்று லட்சம் சம்பளம். மீண்டும் அப்பா முன் நின்றேன். நான் திரைப்படத் துறையில் உதவி இயக்குநராகப் போகிறேன். இந்த வேலை வேண்டாம் என்றேன். என்னை உற்றுப் பார்த்துவிட்டுச் சொன்னார், 'உன் முடிவை நீயே எடு. பின் நாட்களில் அதற்காகச் சந்தோஷப்படவும் வருத்தப்படவும் உனக்கே உரிமை உண்டு!' அன்று நான் சலனப்பட்டு அமெரிக்கா சென்றுஇருந்தால், முனைவர் நா.முத்துக்குமாராக மட்டுமே இருந்திருப்பேன். சினிமாவுக்கு வந்ததால் நான்காம் முறையாக நா.முத்துக்குமார் ஆனேன்.
எரிக்க எரிக்க எழுந்து வா!
இயக்குநர் அருண்மொழி, பட்டுக்கோட்டை பிரபாகர், அறிவுமதி என்று பலரிடம் உதவியாளராக இருந்துவிட்டு, என் ஆசான் பாலுமகேந்திராவிடம் சேர்ந்தேன். பெப்சிக்கும் படைப்பாளிகளுக்கும் பிரச்னை நடந்த காலகட்டம் அது. ஒரு வருடமாக வேலை நிறுத்தம். தன் காரை விற்று எங்களுக்குச் சம்பளம் கொடுத்தார் பாலுமகேந்திரா சார். என் தூர் கவிதையை ஒரு விழாவில் எழுத்தாளர் சுஜாதா வாசிக்க, என் மேல் மஞ்சள் வெளிச்சம் விழுந்தது. நண்பர்கள் பாடல் எழுத அழைத்தார்கள். விளையாட்டாக எழுதத் தொடங்கி, கடந்த ஆறு வருடங்களாக அதிக பாடல்கள் எழுதும் பாடலாசிரியர் என்கிற நிலை வரை ஓடிக்கொண்டு இருக்கிறேன்.
'சினிமா உலகம் போட்டியும் பொறாமையும் நிறைந்தது. இங்கு தூங்கும்போதுகூட காலை ஆட்டிக்கொண்டேதான் தூங்க வேண்டும்; இல்லையென்றால், இறந்துவிட்டான் என்று எரித்து விடுவார்கள்' என்றார் என்.எஸ்.கிருஷ்ணன். சென்ற வருடம் என் திருமண நாளன்று, நான் விபத்தில் இறந்துவிட்டதாகவும், தற்கொலை செய்துகொண்டதாகவும் என்னைப்பற்றி வதந்தி கிளம்பியது. இறந்துபோனதை அறிந்த பிறகுதான், 'இறக்க வேண்டும் நான்' என்று எப்போதோ நான் எழுதிய கவிதை ஞாபகம் வந்தது. முகம் தெரியாத அந்த நண்பருக்காகவாவது இன்னும் கவனமாகவும், கூடுதலாகவும் உழைக்க வேண்டும் என்று தோன்றியபோது, நான் ஐந்தாம் முறையாக நா.முத்துக்குமார் ஆனேன்!
விகடன் பதிவிலிருந்து .....

Monday 15 August 2016

உலகையே புரட்டிப்போட்ட அறிக்கை....

வேர்களைத் தேடிய பயணம்!


சமத்துவம்தான் பெரியாரின் அடிப்படை நோக்கம் என்றால், அந்த வேலையைப் பார்க்காமல், ஏன் கடவுள் மறுப்புப் பரப்புரையில் அவர் இறங்கினார்? ஏன் மதங்களுக்கு எதிராக - குறிப்பாக இந்து மதத்திற்கு எதிராக - காலம் முழுதும் எழுதியும், பேசியும் வந்தார்? இப்படித்தான் பலரும் கேட்கின்றனர்.
சாதி, மதம், கடவுள் எல்லாம் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்திருந்ததுதான் அதற்கான காரணம். அதிலும் இந்து மதம் என்பது வருண-சாதி பிரிவுகளின் உற்பத்தித் தளமாக இருக்கின்றது. அதனால்தான் இந்து மதம் வேர் கொண்டுள்ள இந்தியாவிலும், இந்தியாவாக இருந்த நாடுகளிலும் மட்டுமே ஜாதி உள்ளது.
வேறு மதங்களிலும் பிரிவுகள் உள்ளன. ஆனால் அவற்றிற்கும் ஜாதிக்கும் இடையில் பெரும் வேறுபாடு உள்ளது. கத்தோலிக்கம், புராடஸ்டண்ட் ஆகிய பிரிவுகளும், சன்னி, ஷியா போன்ற பிரிவுகளும் இந்து மதத்தில் உள்ள சைவம், வைணவம் போன்றவை. பிறப்பால் தீர்மானிக்கப் படுபவை அல்ல. ஜாதி என்பது பிறப்பின் அடிப்படையிலானது.
'ஜா' என்றாலே பிறப்பு என்றுதான் பொருள். அதனால்தான், பத்மஜா (தாமரையில் பிறந்தவள்), வனஜா (வனத்தில் பிறந்தவள்) என்றெல்லாம் பெயர்கள் வைக்கப்படுகின்றன. சைவத்திலிருந்து வைணவத்திற்கு மாற முடியும். சமயத்திலிருந்து அப்பர் சைவத்திற்கு மாறவில்லையா? ஆனால் அருந்ததியர் ஒருவர் முதலியாராகவோ, கோனாராகவோ மாற முடியுமா? அவர் மட்டுமின்றி, அவருடைய பரம்பரையில் கூட எவர் ஒருவரும் தன் ஜாதியை மாற்றிக் கொள்ள முடியாது.
அவ்வாறு மாற்றிக் கொள்ளவே முடியாத ஒரு ஏற்றத் தாழ்விற்கு வழி வகுக்கும் வருண சாதிப் பிரிவுகளுக்கான வேர்கள் இந்துமத வேதத்திலேயே காணக் கிடக்கின்றன.
இந்து மதத்தின் அடிப்படை ஸ்ருதியும், ஸ்மிருதியும்தான். சுருதி என்றால் தெய்வத்தால் அருளப்பட்டது, மனிதர்களால் கேட்கப் பட்டது என்று ஆகும். ஸ்மிருதி என்பவை நினைவில் கொள்ளத்தக்கவை அல்லது வழி வழியாக வந்தவை எனப் பொருள்படும். அவை மனிதர்களால் இயற்றப்பட்டவை.
வேதங்களும், உபநிடதங்களும் கடவுள் அருள் பெற்ற ரிஷிகளால் அருளப்பெற்ற ஸ்ருதிகள் என நம்பப்படுகின்றன. அவற்றுள் ரிக் வேதமே ஆதி வேதம். அந்த வேதத்தின் பத்தாவது இயலான புருஷ சூக்தம்தான் வருண வேறுபாட்டை 'எடுத்தருள்கிறது.' அந்த வருண அடிப்படையில், பிற்காலத்தில் ஒவ்வொரு வருணத்திற்குமான "தருமம்" கூறப்படுகிறது. இந்து மதத்தைப் பொறுத்தமட்டில் 'தருமம்' என்றால் அறம், நீதி என்றெல்லாம் பொருள் இல்லை. அவரவர் வருணத்திற்கு ஏற்ப விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்வதே அறம்.
சூத்திரனுக்கு விதிக்கப்பட்ட தருமம், "பலனை எதிர்பார்க்காமல் மற்ற வருணத்தாருக்கெல்லாம் தொண்டூழியம் செய்ய வேண்டும் என்பதே ஆகும். ஆக, , ஏற்றத் தாழ்வைப் பரம்பரை பரம்பரைக்கும் உறுதி செய்கிறது இந்து மதம். . பிறகு அதனை விட்டுவிட்டு ஜாதியை எப்படி எதிர்ப்பது. ஜாதியை எதிர்க்காமல் சமத்துவத்தை எப்படிப் பெறுவது? சமதத்துவம் இல்லாத இடத்தில் சுயமரியாதை எங்கிருந்து வரும்?
அதனால்தான் பெரியார் சொன்னார், "நான் ஜாதி என்கிற நச்சு மரத்தைப் போட்டுப் பொசுக்கத்தான் புறப்பட்டேன். உன் மதம் புனிதமானது என்றால், ஜாதியை விட்டு மதத்தைப் பிரித்து எடுத்துக் கொண்டு போ. முடியாது, இரண்டும் சேர்ந்தேதான் இருக்கும் என்றால் நான் அதனையும் சேர்த்தே ஒழிக்க வேண்டும். அப்படிச் செய்கிறபோது உன் கடவுள் உனக்குப் புனிதம் என்றால், இவைகளை விட்டுத் தனியாக எடுத்துக் கொண்டு போய்விடு. இல்லையில்லை, ஜாதி, மதம், வேதம், கடவுள் எல்லாம் ஒன்றோடு ஒன்று பிரிக்க முடியாதபடி பின்னிப் பிணைந்து கிடக்கிறதென்றால், கடவுளையும் போட்டுப் பொசுக்குவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை".
பெரியாரின் கடவுள் மறுப்பு இதுதான்! இந்த நோக்கில்தான் 'கடவுளை மற, மனிதனை நினை' என்கிறது பெரியாரியம்
-
சுப வீரபாண்டியன் அவர்களின் சுயமரியாதை தொடரில் ஆறாம் பகுதி

நீங்கள் அவர்களை வெகுதூரத்தில் தேடாதீர்கள்

சமத்துவத்தையும்,சமூக நீதியையும் நோக்கி நீங்கள் ஒரு அடி முன்னே வைத்தால்,
உங்களை நான்கு அடி பின்னே இழுக்க தயாராக இருக்கும் ஒரு கூட்டம் இங்கு இருக்கிறது,
நீங்கள் அவர்களை வெகுதூரத்தில் தேடாதீர்கள்,அவர்கள் உங்கள் அருகாமையில் உங்கள் தோழன் போல் உங்கள் தோள்களில் கைபோட்டு பார்ப்பனியத்தின்‬ ஏவுகணையாக நின்றுக்கொண்டிருப்பார்.அவர்களின்
இரு கேள்விகள் இப்படியாக இருக்கும்.
1, இட ஒதுக்கீட்டால் நாங்கள் திறமையிருந்தும் பாதிக்கப்படுகிறோம்,
2,இப்பல்லாம் யாருங்க ஜாதி பார்க்கிறார்கள்,எல்லோரும் ஒற்றுமையாய்தானே இருக்கிறோம்.


எச்சரிக்கை‬,

இவர்களிடம் வைகோவை காணும் விஜயகாந்தை போல ஒதுங்கி இருங்கள்.