Monday 15 August 2016

இதற்கு பெயர் சுதந்திரமா?

ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை இணைந்து வழங்குவோர்…. அந்நிய முதலீடுகள்…!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே… மாணவர்களே…
நாட்டு வளம், காட்டு வளம், கடல் வளம், கனிம வளம் – அனைத்திலும் அந்நிய முதலீடு! இந்நிலையில் இவர்களுக்கு சுதந்திர தினம் ஒரு கேடு!
காலையில் பல் துலக்கும் பேஸ்டிலிருந்து, இரவு ஏற்றி வைக்கும் கொசுவத்தி வரை அனைத்திலும் பன்னாட்டு கம்பெனிகளின் பிடி! ஆனால் கம்பத்தில் பறக்க விடுவதற்கு மட்டும் தேசியகொடி! அது மட்டும் எதற்கு? பேசாமல் அமெரிக்க கொடியை ஏற்றி விடலாமே!
பன்னாட்டு கம்பெனிகளுக்கு தடையில்லாமல் தண்ணீர், மின்சாரம்… ஆனால் நமக்கில்லை!
காசில்லாதவனுக்கு கல்வியில்லை! படித்தவனுக்கு வேலையில்லை! இருப்பவனுக்கோ அது உத்திரவாதமில்லை! ஆக மொத்தம் வாழ்வதற்கே வழியில்லை! இதற்கு பெயர் சுதந்திரமா?
மோடி, லேடி முதல் அனைத்து ஓட்டுப் பொறுக்கிக் கட்சி கேடிகளும் செய்வதெல்லாம் ஃபிராடுதனம், பித்தலாட்டத்தனம்… ஆனால் பேசுவது மட்டும் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்!
நாட்டையே பன்னாட்டு கம்பெனிகளுக்கு கூறுபோட்டு விற்பதற்கு பெயர் சுதந்திரமாம்!
பெட்ரோல், டீசல் விலை உயர்வு, ரயில் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு… மக்களுக்கு! 5 இலட்சம் கோடி ரூபாய் வரிச்சலுகை – பன்னாட்டு கம்பெனிகளுக்கு! – இதற்குப் பெயர் சமத்துவமாம்!
மதக்கலவரங்களையும, சாதிக்கலவரங்களையும் தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதற்கு பெயர் சகோதரத்துவமாம்! போங்கடா… நீங்களும் உங்க சுதந்திரமும்…
ஆக மொத்தத்தில் இது போலி சுதந்திரம். இதற்கு ஏன் கொண்டாட்டம்? உண்மையான சுதந்திரத்திற்கு தேவை மீண்டுமொரு விடுதலைப் போராட்டம்...

No comments:

Post a Comment